Breaking News

இந்திய முதலீட்டில் கிழக்கில் சகல வசதிகளுடனும் கூடிய பாரிய வைத்தியசாலை ஒன்றை அமைப்பது குறித்து திட்டம் ?

இந்தியாவில் பாரிய தனியார் வைத்திய சலைகளை இயக்கும் ருக்மணி மெமொரியல் மருத்துவமனை மற்றும் ருக்மணி தாதிப் பயிற்சிக்கல்லூரிகளின் நிருவாக இயக்குனர் டாக்டர் மோகன் குழுவினர் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதை அவரது கொழும்புக் காரியாலயத்தில் சந்தித்தனர். 

இச்சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தில் தனியார் வைத்தியசாலை ஒன்றினை அமைப்பது தொடர்பாக நீண்ட கலந்துரையாடல் மேற்கொண்டனர். கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் அல்லது விரும்பிய ஒரு மாவட்டத்தில் சகல வசதிகளும் அடங்கிய கிழக்கு வைத்தியசாலை ஒன்றை அமைக்க சம்மந்தப்பட்ட குழுவினரிடம் முதலமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

இதுவரை  பாரிய சத்திர சிகிச்சை மற்றும் சில நோயாளர்களுக்கு கிழக்கில் இருந்து கொழும்புக்கு வரவேண்டிய நிலையே ஏற்பட்டுள.
 எனவே இதனால் ஏற்படும் சிரமத்தைத் தடுக்க சகல வசதிகளும் கொண்டதான வைத்தியசாலை ஒன்றை கிழக்கில் அமைப்பதானது பெரும் வெற்றியாக கிழக்கு மக்கள் ஏற்று சந்தோஷமடைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
 எனவே இப்படியான வைத்தியசாலை ஒன்றினை அமைக்க முழு ஆதரவினை கிழக்கு மாகாண சபை வழங்கத் தயாராக இருக்கிறது என்று முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இந்திய வைத்திய தூதுக்குழுவினரிடம் தெரிவித்தார்.

குறிப்பிட்ட இச்சந்திப்பில் இந்திய தமிழ் நாடு மற்றும் கேரளாவைச் சேர்ந்த வைத்தியர்களான எஸ்.எஸ்.முகம்மட் இப்றாகிம், எம்.மோகன், சீ.எ.ராஜன், எஸ்.ஞானமூர்த்தி , என்.உதயா பானு இவர்களுடன்  இணைப்பாளர் மனோவை அஷோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.