Breaking News

இயக்குனராக மாறும் தனுஷ்.

நடிகர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர் மற்றும் பாடகரைத் தொடர்ந்து, இயக்குனராகவும் தனுஷ் மாறியுள்ளார். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம், நடிகராக அறிமுகமானவர் தனுஷ். அதன்பின், காதல் கொண்டேன், புதுப்பேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுஷின் உடல் வாகை பார்த்து, 'இவரெல்லாம் கதாநாயகனாக நடிக்க வந்து விட்டார்' என, கேலி செய்தனர். தன் மைனசை, பிளஸ் ஆக்கி, பல வெற்றிப் படங்களையும், தேசிய விருதையும் தனுஷ் தட்டிச் சென்றார். நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராகவும் மாறி, காக்கா முட்டை படத்தை தயாரித்து தேசிய விருது பெற்றார். நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடல் ஆசிரியரான தனுஷ், தற்போது இயக்குனராக மாறி உள்ளார். அவர் இயக்கும் படத்தில், நடிகர் ராஜ்கிரண் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்; மற்ற நடிகர், நடிகையர் தேர்வு நடந்து வருகிறது.