Breaking News

இசைத்துறையில் அடியெடுத்து வைக்கும் தில்ஷான்!!

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கியவர் திலகரத்ன தில்ஷான். இவர் சமீபத்தில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர் தற்போது இசைத்துறையில் கால் பதித்துள்ளார்.

திலகரத்ன தில்ஷான் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா திலினி ஆகியோர் பாடியுள்ள பாடல் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர்கள் பாடியுள்ள பாடல் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்ல. இசைப்பிரியர்களையும் கவர்ந்துள்ளது.