Breaking News

சட்டத்திற்கு முரணாகவோ,நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் நான் மேற்கொள்ளவில்லை. மட்டு-அரசாங்க அதிபர் சார்ள்ஸ்

ற்கொள்ளவில்லை எனவும்,அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு தரப்புக்களிலும், பத்திரிகையிலும்,புத்திஜீவிகளால் கூட்டப்படுகின்ற கூட்டங்களிலும் என் மீது சுமத்தப்படுகின்ற பாரிய குற்றச்சாட்டு சம்மந்தமாக பொது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு உள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் மக்களுடைய மீள்குடியேற்றத்தையும்,சிங்கள மக்களுடைய மீள்குடியேற்றத்தையும் ஊக்குவிக்கின்ற ஒருவராகவும் இனத்தின் துரோகியாகவும் என்னை இனம் காட்ட பலர் முயற்சிக்கின்றனர்.

அரசாங்க அதிபராக இந்த மாவட்டத்திலே இன,மத,மொழிகளுக்கு அப்பால் சேவையாற்றும்படிதான் அரசின் கொள்கைகளும்,தீர்மானங்களும்,சுற்று நிருபங்களும் எங்களுக்கு சுட்டிக்காட்டுகின்றன.

இதிலே உதாரனமாக இரண்டு விடயங்களை முக்கியமாக எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன்.

முதலாவது வாகரை பிரதேசத்தில் மருதங்கேணிக்குளம் என்கின்ற பகுதியில் அண்மையிலே மீள்குடியேற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்ற 22 குடும்பங்களுடைய விடயம் சம்மந்தமாக 2014 ஆண்டு 4ம் மாதத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் நேரடியாக அந்த பிரதேசத்தில் இருந்த மக்களது விபரங்கள் திரட்டப்பட்டு அவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கைக்கு எடுக்கும்படி மீள்குடியேற்ற அமைச்சு எங்களுக்கு தெரிவித்திருந்தது.

இந்த அடிப்படையிலே தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுனராலும்,ஏனைய பாராளுமன்ற ,மாகாண சபை உறுப்பினர்களாலும்,முதலமைச்சர் உள்ளிட்ட அனைவராலும் பரிந்துரைக்கப்பட்ட கோரிக்கைகள் அடங்களாக அனைத்தையும் பிரதேச செயலாளரது நடவடிக்கைகாக அனுப்பியிருந்தோம்.

பிரதேச செயலாளரின் தலைமையிலே நியமிக்கப்பட்ட ஒரு குழு இந்த மக்களுடைய விபரங்களை உறுதிப்படுத்திய பின்னர் அவர்கள் யுத்தம் இடம்பெற்ற காலத்திற்கு முன்னர் அப்பகுதயில் வாழ்ந்தவர்கள் என்ற அடிப்படையிலே அவர்களின் மீள்குடியேற்றத்திற்கான சிபாரிசை வழங்கியதன் அடிப்படையிலும் அவர்கள் ஏற்கனவே இருந்த காணிகள் வேறு மக்களுக்கு பிரதேச செலாளரினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காரணத்தினால் தற்போது அவர்களுக்கான மாற்றுக் காணிகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதிலே உண்மையான ஒரு விடயத்தை இன்று சொல்ல வேண்டிய தேவை இருக்கின்றது.

முன்னாள் அமைச்சர் தேவநாயகம் அவர்கள் இங்கு அமைச்சராக இருந்த காலத்தில் 1977ம் ஆண்டுக்கு முன்னர் இந்தப் பகுதியிலே 100 முஸ்லிம் குடும்பங்களுக்கு அரச காணிகள் வழங்கப்பட்டு அங்கு அவர்கள் வசித்து இருக்கின்றார்கள்.அதற்கான ஆவணங்களும் பிரதேச செயலகத்திலே முன்னர் செயலாளர்களாக கடமையாற்றிய அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதே போல் இந்த மாவட்டத்தின் சில பகுதிகளில் யுத்த காலத்திற்கு முன்னர் வெளியேறிய சிங்கள மக்களும் தங்களுடைய இருப்புக்களை பிரதேச செயலாளரிடம் உறுதிப்படுத்திய பின்னர் அவர்களுக்கு மீள்குடியேற்றம் செய்யும்படியாக மீள்குடியேற்ற அமைச்சு வழங்கிய அறிவுறுத்தல் பிரகாரம்தான் நாங்கள் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை செய்கின்றோமே அல்லாமல் அரசாங்க அதிபராகிய நான் தன்னிச்சையாக எந்தவொரு இனத்திற்கும்,மதத்திற்கும்,மொழிக்கும் முன்னிறுமை கொடுத்தோ ,சட்டத்திற்கு முரணாகவோ,நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் நான் மேற்கொள்ளவில்லை.

இதே போல் 2011ம் ஆண்டு கிரான் பிரதேச செயலகத்திலே அந்தப் பிரதேச செயலாளர் 360 முஸ்லிம் குடும்பங்களுக்கு காணி உத்தரவுப் பத்திரத்தை வழங்கியுள்ளார்.

இவைகள் எல்லாம்  செய்யப்படுகின்ற அதிகாரிகள் யாராகவோ இருக்க  இதிலே எதிலுமே ஈடுபடாமல் இருக்கின்ற என்னை ஒரு துரோகியாக காட்ட ஊடகங்களும்,புத்திஜீவிகளும்,சில அதிகாரிகளும் ,சமூகத்தை சேர்ந்தவர்களும் முற்படுகின்றனர்.

மீள்குடியேற்ற விடயத்தில் தங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் உண்மையாக அவற்றை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமாக இருந்தால் அவற்றை நேரடியாக என்னிடமோ அல்லது இந்த விடயத்தை கையாளுகின்ற மாவட்ட செயலகத்தின் எந்த அதிகாரயிடமோ நேரடியாக தொடர்பு கொண்டு அதைப் பற்றிய விளக்கங்களை பெற்றுக்கொள்வதுதான் நாகரிகமான செயற்பாடுகள் என நாங்கள் நினைக்கின்றோம்.

அதைவிட இரகசியமாக கூட்டங்களை கூட்டி அந்த கூட்டங்களிலே கேவலமான விதத்தில் விமர்சிக்கின்ற அநாகரியமான நடைமுறைகளை கைவிடுவார்கள் என்று நான் எதிர்பார்ப்பதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மேலும் தெரிவித்தார்.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)