Breaking News

இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மட்டு- புல்லுமலைக்கு விஜயம்.படங்கள் !!!

கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுடிருக்கும் இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் Shelley Whiting    27-10-2016 நேற்று  முன்தினம் வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.

இதன் அடிப்படையில்  கனடா பாடும் மீன்கள் அமைப்பினரால்  பெரிய புல்லுமலையில் கட்டிக் கொடுக்கப்பட்ட  வீட்டுத் திட்டத்தை பார்வையிடவும்,  அழிந்து போயுள்ள பெரிய புல்லுமலையை பார்வையிடவும், கனடா பாடும் மீன்களின் அழைப்பின் பேரில்  இலங்கைக்கான கனேடிய நாட்டு உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங்,  கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர்  பேராசிரியர்  ஜெயசிங்கம்  அடங்கிய குழுவினரும்  நேற்று  பிற்பகல் பெரிய புல்லுமலைக்கு  விஜயம்  செய்து  பிரதேசத்தின் பல இடங்களையும் பார்வையிட்டனர்.  

அத்தோடு அங்கு  கும்பாபிஷேகம்  செய்யப்பட்ட  விநாயகர் ஆலயம்,  கனடா பாடும் மீன்கள்  அமைப்பினரால்  கட்டிக் கொடுக்கப்பட்ட  வீடுகள்,  அழிந்து போயிருக்கும் வீடுகள் ,கடைகள், தேக்கந்தோட்டம், தமிழ் பாடசாலை , புதிதாக கட்டப்பட்ட  மாதா கோவில்  என்பனவற்றை பார்வையிட்டதுடன்  இறுதியாக மாத கோவில் மண்டபத்தில் இடம் பெற்ற பொதுமக்களுடனான சந்திப்பிலும்   கலந்துகொண்டு  மக்களுக்கு பல வாக்குறுதிகளையும்  வழங்கிச்  சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)