Breaking News

35 பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் வழங்கி வைப்பு-படங்கள்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் 2016 பாரம்பரிய கைப்பணிக் கிராமங்களை அபிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 03-11-2016 வியாழக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத் தலைவருமான சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் கலந்து கொண்டார்.

இதன் போது தெரிவு செய்யப்பட்ட 35 பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களுக்கான  உபகரணங்கள் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அலியினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காத்தான்குடி உதவிப் பிரதேச செயலாளர் ஏ.சி.அஹமட் அப்கர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பரீட் , பிரதியமைச்சர் அமீர் அலின் இணைப்பாளர்களான சட்டத்தரணி றூபி, மாஹிர்,பிரதேச செயலக கணக்காளர் செல்வி.எஸ்.சித்திரா,பிரதேச உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.சிவராஜா உட்பட காத்தான்குடி பிரதேச செயலக அதிகாரிகள்,உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு வழங்கி வைக்கப்பட்ட பன்சார் அலங்கார உபகரணங்களை வழங்குவதற்கு கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் 5 இலட்சம் ரூபா நிதியும் ,மக்கள் பங்களிப்பாக பன்சார் அலங்கார உற்பத்தியாளர்களிடம் இருந்து 4000 ரூபா வீதம் 35 பேரிடமிருந்து 1 இலட்சத்து நாற்பதாயிரம் ரூபாவும் நிதியும் , கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சினால் பன்சார் அலங்கார பயிற்சிக்காக இருபதாயிரம் ரூபா நிதியும் வழங்கி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)