கிழக்கு மாகாணத்தில் இலஞ்ம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக நடவடிக்கை !!!
இதன் மூலமே அரச துறையினை கட்டியெழுப்ப முடியும் எனவும் மக்களுக்கு அராசாங்கம் மீதான நம்பிக்கையையை வலுப்படுத்துவதற்கு இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிக்கப்படவேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
திருகோணமலையில் உள்ள மாகாண சபைக்கட்ட்டத்தில் இடம்பெற்ற கிழக்கு மாகாண சமூகசேவை உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்தகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இதனைக் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கில் போடப்பட்ட பல வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதற்கும் பல கட்ட்டங்கள் இடிபாடுகளுடன் காணப்படுவதற்கும் இலஞ்சம் மற்றும் ஊழலே காரணம் என கிழக்கு முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே தற்போது கிழக்கு மாகாணத்தின் நிர்வாகத்தில் சாதகமான மாற்றங்களை செய்து வருவதுடன் அதற்கு ஏற்றாற்போல் அரச அதிகாரிகளும் ஒத்தழைப்பு வழங்க வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்கேட்டுக் கொண்டார்
இன்று கிழக்கு மாகாண அரசதுறையில் பல வெற்றிடங்கள் காணப்படுவதற்கு கடந்த ஆட்சியாளர்களின் நிர்வாக்க் குறைபாடே பிரதான காரணம் என முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் தமது ஆட்சிக் காலப் பகுதிக்குள் கிழக்கில் காணப்படும் ஆளணிவெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கிழக்கு முதலமைச்சர் இங்கு கூறினார்
நியமனங்ளை பெற்றுக் கொள்ளுவதற்கு ஓடி ஆடி அலைந்து திரிபவர்கள் நியமனங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் ஓய்வூதியம் பெற்றவர்கள் போல் செயலாற்றுகின்ற யதார்த்த்தையே இன்று காண முடிவதாகவும் அதனை மாற்றுவதற்கு அனைத்து அரச உத்தியோகத்தர்களும் முன் வரவேண்டும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இங்கு கேட்டுக் கொண்டார்