Breaking News

கிழக்கு மாகாணத்திற்கான 150வது பொலிஸ் தின மற்றும் பொலிஸ் அணிவகுப்பு மரியாதை நிகழ்வு -படங்கள்.

இலங்கைபொலிஸ் திணைக்களத்தின் கிழக்குமாகாணத்திற்கான 150வது பொலிஸ் தினஆரம்பநிகழ்வு 01-11-2016 நேற்று செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு அருகாமையில் பொலிஸ் அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமானது.

பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரதலைமையில் இடம்பெற்றமேற்படிநிகழ்வில் மட்டக்களப்புமாவட்டஅராசங்கஅதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ்,மட்டக்களப்புமாவட்டநீதவான் நீதிமன்றநீதிபதிஎம்.கணேசராஜா,மட்டக்களப்புதொழில் நீதிமன்றநீதிபதிஎம்.சியான்,கிழக்குமாகாணசிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் சுமித் எதிரிசிங்க,மட்டக்களப்புஅம்பாறைமாவட்டபிரதிப் பொலிஸ் மாஅதிபர் ஜெயகொடஆராச்சி,மட்டக்களப்புமாவட்டசிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கருணாநாயக் உட்பட இலங்கைபொலிஸ் படை,விமானப் படை,கடற்படை,இராணும் ,பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் உயரதிகாரிகள் ,அரசஉயரிகாரிகள் ,பாடசாலைமாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.

இதன் போதுபொலிஸ் படைமற்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படைஆகியோரினால் பொலிஸ் அணிவகுப்புமாரியாதை இலங்கைப் பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு
வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு வருகைதந்த பௌத்த,இந்து, இஸ்லாம், கத்தோலிக்க மதகுருமார்களுக்கு பொலிஸ் மாஅதிபரினால் அன்பளிப்புக்கள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மட்டக்களப்புபாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற 150வது பொலிஸ் தின நிகழ்வின் போது இலங்கை தேசியக் கொடி,பொலிஸ் கொடி,கிழக்குமாகாண சபை கொடி என்பன அதிதிகளினால் ஏற்றப்பட்டதுடன் சமாதனத்திற்கான பாலுன்களும்,புறாக்களும் பறக்கவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)