கூகுளிலும் போலி வந்துருச்சா ???
அரிசி முதல் முட்டை வரை பிளாஸ்டிக்கினால் போலிகள் வந்து பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ள நிலையில் உலகின் நம்பர் ஒன் தேடுதள இணையதளமான கூகுளிலும் போலி வந்துள்ளதாம்
கடந்த இரண்டு நாட்களாக ஒருசில கம்ப்யூட்டர்களில் கூகுள் இணையதளம் போலவே போலியான இணையதளம் திரையில் தோன்றியுள்ளது. தப்பித்தவறி இந்த இணையதளத்தை ஓப்பன் செய்துவிட்டால் அவ்வளவுதான் உங்கள் கம்ப்யூட்டரை வைரஸ் பற்றிக்கொள்ளும்
Google என்பதன் முதல் எழுத்தான G-க்கு பதிலாக லத்தீன் மொழியில் இதேபோல இருக்கும் G என்ற எழுத்தைப் போட்டு கூகுள் இணையதளத்தின் போலி தயாரிக்கப்பட்டுள்ளதாம். தற்போது கூகுள் உடனடியாக இதை சரிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.