Breaking News

இஸ்ரேலில் ஜெருசலேமை அண்மிக்கும் காட்டுத் தீ !!!

இஸ்ரேலில் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் வனப்பகுதியையொட்டி தங்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

இஸ்ரேலின் மிகப் பெரிய 3-வது நகரம் ஹைபா. இது ஜெருசலேம் அருகே மேற்கு கரையில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக இங்கு கடும் வறட்சி நிலவுகிறது. அதை தொடர்ந்து ஹைபா நகரை ஒட்டியுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பிடித்தது. காற்று வேகமாக வீசியதால் தீமளமள வென பரவி நகரப் பகுதிக்குள்ளும் நுழைந்தது. இதனால் கடும் புகை மூட்டமும் ஏற்பட்டது.

அதை தொடர்ந்து ஹைபா நகரில் வனப்பகுதியையொட்டி தங்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர். இதற்கிடையே அங்கு பெரும்பாலான வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டது. தீ மற்றும் புகை காரணமாக 130 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

காட்டுத் தீ அணைக்க முடியாத அளவுக்கு தொடர்ந்து பரவுகிறது. எனவே சைப்ரஸ், ரஷியா, இத்தாலி, குரோஷியா, மற்றும் கிரீஸ் நாடுகள் தீயணைப்பு கருவிகள் மற்றும் விமானங்களை அனுப்பியுள்ளது.