Breaking News

சொகுசு வாகனங்களுக்கு ஆகக்குறைந்த தண்டப்பணமாக ரூ. 10,000 அறவிடவும் !!!

வாகனங்களுக்காக ஆகக் குறைந்த தண்டப்பணமாக 2,500 ரூபாய் அறவிக்கப்பட்டுள்ள நிலையில் சொகுசு வாகனத்துக்கு ஆகக் குறைந்தது 10,000 ரூபாயைத் தண்டப்பணமாக அறவிடும்படி இலங்கை மோட்டார் சைக்கிள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்றிமூலம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,   வாகனங்களுக்காக ஆகக் குறைந்த தண்டப்பணமாக 2,500 ரூபாய் அறவிக்கப்பட்டுள்ளநிலையில் குறைந்தளவான வருமானம்  பெறுகின்ற சாரதிகளை மென்மேலும் துன்பத்துக்கு உள்ளாக்கும் செயற்பாடாகும். எனவே குறித்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டுமாயின், மேற்குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்றவேண்டும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

அத்துடன் குறித்த 2500 ரூபாய் தண்டப்பணமானது மோட்டார் சைக்கிள் காரர்கள் மாதமொன்றுக்கு, எரிபொருளுக்காக செலவிடும் தொகையையிலும் அதிகமாகும் எனவும்  இதேவேளை, தவறிழைக்கும் சாரதிகளிடமிருந்து அறவிடப்படும் தண்டப்பணமானது, வாகனங்களின் பெறுமதிக்கேற்ப அறவிடப்படவேண்டும் என்றும் அச்சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.   அதன்பிரகாரம், 100 சீ.சி-க்குக் குறைவான வாகனங்களுக்கு 30 சதவீதமும், 100 சீ.சி-க்குக் கூடுதலான வாகனங்களுக்கு 50 சதவீதமும், சொகுசு வாகனங்களுக்கு 400 சதவீதமும் தண்டப்பணம் அறவிடப்படவேண்டும் என்றும் அச்சங்கத்தின் கடிதத்தில் ஜோசனை ஒன்றையும் முன்மொழிந்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.