Breaking News

தீவிரவாதிகள் தாக்குதலில் இருந்து நண்பர்களை காப்பாற்றும் முயற்சியில் உயிர்நீர்த்த வாலிபருக்கு அன்னை தெரசா விருது

வங்காளதேஸ் தலைநகரம் டாக்காவில் வெளிநாட்டு தூதரக அலுவலகங்கள் உள்ள பகுதியில் ஹோலி கபே என்ற ஓட்டல் உள்ளது. கடந்த ஜூலை 1-ந்தேதி அங்கு புகுந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

அதில் வங்காளதேசை  சேர்ந்த பராஷ் அயாஷ் உசேன் (25). என்ற வாலிபர் கொல்லப்பட்டார். வங்காள தேசத்தை சேர்ந்தவரான இவரை வெளியேற தீவிரவாதிகள் அனுமதித்தனர். ஆனால் தன்னுடன் வந்திருந்த வெளிநாட்டு நண்பர்களையும் விடுவிக்கும்படி பராஷ் கேட்டுக் கொண்டார்.

அதற்கு மறுத்த தீவிரவாதிகள் அவரையும் சுட்டுக் கொன்றனர். அவரது உயிர் தியாகத்தை போற்றி கவுரவிக்கும் வகையில் அவருக்கு அன்னை தெரசா நினைவு சர்வதேச விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதை ‘ஹார்மோரி’ அறக்கட்டளை தலைவர் ஆபிரகாம் மதாய் மும்பையில் நடந்த விழாவில் பராஷ் அயாஷ்உசேனின் பெற்றோரிடம் வழங்கினர்.

பராஷ் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக் கழத்தில் ஆக்ஸ்போர்டு கல்லூரியில் படித்தார். கோடை விடுமுறைக்காக அமெரிக்காவில் இருந்து வங்காளதேஸ் வந்திருந்த போது தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு பலியானார்.

இதற்கு முன்பு நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாய், திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா, மலேசிய முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது உள்ளிட்டோர் அன்னை தெரசா விருது பெற்றுள்ளனர். மரணம் அடைந்த பின்னர் இந்த விருது பெறும் முதல் நபர் பராஷ் அயாஷ் உசேன் என்பது குறிப்பிடத்தக்கது.