Breaking News

பில்கேட்ஸ் தம்பதியருக்கு அமெரிக்காவின் அதிஉயர் கெளரவம் !!

அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு, உலக அமைதி, கலை, விளையாட்டு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் ஆற்றும் சேவைகளை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ‘மெடல் ஆப் ஃப்ரீடம்’ (சுதந்திர பதக்கம்) என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.

அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி அதிபரின் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது.

உலகம் முழுவதும் போலியோ நோயை ஒழிப்பதற்காக சேவை புரிந்த பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவரான பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலின்டா கேட்ஸ் ஆகியோருக்கு அதிபர் பராக் ஒபாமா இவ்விருதினை வழங்கி, வாழ்த்தினார்.

முன்னாள் கூடைப்பந்து வீரர்கள் மைக்கேல் ஜோர்டான், கரிம் அப்துல் ஜப்பார், நடிகர்கள் டாம் ஹான்க்ஸ், ராபர்ட் டி நீரோ மற்றும் ராபர்ட் ரெட்ஃபோர்ட்ராக்ஸ்டார் இசைக்குழுவை சேர்ந்த புருஸ் ஸ்பிரிங்ஸ்டீன், பாடகி டயானா ராஸ், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் எல்லென் டிஜெனெரெஸ்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் சந்திர ஆராய்ச்சிக்கு துணையாக இருந்த கம்ப்யூட்டர் அறிவியலாளர் மார்கரெட் ஹாமில்டன், அமெரிக்கர்கள் சமுதாயத்தின் மூத்த தலைவர் எலோயிஸ் கோபெல் ஆகியோருக்கும் ஒபாமா விருதுகளை அளித்து கவுரவித்தார்.