சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும்
(லியோன்)
மட்டக்களப்பு மாவட்ட சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான
வருடாந்த ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் மட்டக்களப்பில் நடைபெற்றது .
 
மட்டக்களப்பு மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவன அனுசரணையில் மாவட்ட  சர்வமத மற்றும் சமாதான குழுக்களுக்கிடையிலான வருடாந்த
ஒன்று கூடலும் ஆண்டு நிறைவு விழாவும் மாவட்ட கரித்தாஸ் எகெட் நிறுவன இயக்குனர்
அருட்பணி ஜெரோம் டி லிமா தலைமையில் மட்டக்களப்பு (YMCA) வாலிப
கிறிஸ்தவ சங்க ஒன்றுகூடல் மண்டபத்தில் 16.12.2016  வெள்ளிக்கிழமை நடைபெற்றது . 
நடைபெற்ற வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வில் மட்டக்களப்பு
மாவட்டத்தின்  கிராம மட்டத்தில்
இயங்குகின்ற சர்வமத மற்றும் சமாதான 
குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சமூக இன நல்லிணக்க செயல்பாடுகள் தொடர்பாகவும்  அடுத்த ஆண்டில் கிராம மட்டத்தில்  மேற்கொள்ளப்படுகின்ற  சமாதானம் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாகவும்
கலந்துரையாடப்பட்டது 
இதனை தொடர்ந்து  நடைபெற்ற
ஆண்டு நிறைவு விழா  நிகழ்வில் மாவட்ட
சர்வமத மற்றும் சமாதான குழு உறுப்பினர்களின் கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதுடன்
இவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது . 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு காத்தான்குடி மஞ்சந்தொடுவாய் சர்வ மத குழு
தலைவர் எம் .ஐ .எம் . உசானார் , நாவக்குடா இயேசு விடுவிக்கிறார் ஆலய போதகர் எஸ் .
புவனேந்திரன் , மண்முனை வடக்கு சர்வ மத குழு தலைவர் பி .பெர்னாண்டோ ,
கலைக்கோட்டன்  அ. இருதயநாதன் மற்றும்
மட்டக்களப்பு மாவட்ட  சர்வமத மற்றும்
சமாதான குழு தலைவர்கள் , அங்கத்தவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் 















