அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய பங்கு மறைக்கல்வி மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு
(லியோன்)
மட்டக்களப்பு அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய வருடாந்த ஒளிவிழா
நிகழ்வு ஆலய அரங்கில்  நடைபெற்றது .
மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் அமிர்தகழி தூய கப்பலேந்தி அன்னை ஆலய
பங்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருடாந்த ஒளிவிழா நிகழ்வு  பங்குதந்தை சி .வி .அன்னதாஸ்  தலைமையில் ஆலய அரங்கில் 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை
 மாலை நடைபெற்றது . 
ஒளிவிழா  நிகழ்வில்  மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின்
கிறிஸ்து பிறப்பு ஒளிவிழா கலை நிகழ்வுகள் இடம்பெற்றது  
இதனை தொடர்ந்து  மறைக்கல்வி
பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு ஒளிவிழா நிகழ்வில் கலந்துகொண்ட
அதிதிகளினால்  வழங்கி வைக்கப்பட்டது . 
இந்நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு சிறிய குருமட துணை அதிபர்
அருட்பணி ஜெரிஸ்டன் வின்சென்  ,பெரிய
உப்போடை மரியாயின் பிரான்சிஸ்கன் 
மறைபரப்பு கன்னியர்மட 
அருட்சகோதரிகள் ,மறைக்கல்வி  பாடசாலை ஆசிரியர்கள் , 
பெற்றோர்கள் , பங்கு மக்கள் 
என 
பலர் கலந்துகொண்டனர்





















