மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஒளி விழாவும்,சர்வதேச விஷேட தேவையுடையோர் தின நிகழ்வும்-படங்கள்.!
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் ஒளி விழாவும்,சர்வதேச விஷேட தேவையுடையோர் தின நிகழ்வும் 02-12-2016 இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டு- கிறிஸ்தவ வாலிபர் சங்கத்தின் தலைவர் வி.இ.தர்ஷன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வுகளுக்கு அதிதிகளாக மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர் அருட்திரு ஏ.தேவதாசன்,மட்டக்களப்பு பிரதேச சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஜெயசேகர்,ஐக்கிய நாடுகள் சபையின் கள இணைப்பாளர் மார்க் பெட்டஷன்,மட்டக்களப்பு கல்வி வலய விஷேட தேவையுடையோர் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் எம்.தயானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது அதிதிகளினால் ஒளி விழாவும்,சர்வதேச விஷேட தேவையுடையோர் தின நிகழ்வுகளில் தங்களது ஆற்றல்களையும்,திறமைகளையும் வெளிப்படுத்திய வாழ்வோசை செவிப்புலனற்றோர் பாடசாலை மாணவர்கள் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இங்கு வை.எம்.சீ.ஏ. வாழ்வோசை செவிப்புலனற்றோர் (விஷேட தேவையுடையோர்) பாடசாலை மாணவர்களின் ஆற்றல்களை பிரதிபலிக்கும் வகையில் இசை நடனம்,நாடகம் போன்ற பல்வேறு கலை,கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
2016 கிறிஸ்மஸ் தினம் மற்றும் சர்வதேச விஷேட தேவையுடையோர் தினம் என்பவற்றை முன்னிட்டு இடம்பெற்ற குறித்த நிகழ்வுகளுக்கு மட்டக்களப்பு வை.எம்.சீ.ஏ. நிறுவனத்தின் இணைச் செயலாளர் ஜீ.ஜெ.ஜீவராஜ்,அதன் இயக்குனர் சபை உறுப்பினர்களான எஸ்.எஸ்.பாக்கியராஜா,திருமதி.எஸ்.ஆர்.மதிதரன், திருமதி க.இராசம்பிகை, பி.எஸ்.ஆனந்தராஜா உட்பட வாழ்வோசை செவிப்புலனற்றோர் (விஷேட தேவையுடையோர்) பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள்,வை.எம்.சீ.ஏ. உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.