Breaking News

ஜல்லிக்கட்டு வலுக்கும் போராட்டமும் பெருகும் ஆதரவு தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமின்றி உலகின் தமிழர்கள் வாழும் பல்வேறு நாடுகளிலும் ஆதரவு பெருகி வருகிறது இது தொடர்பான தொகுப்பு உங்களுக்காக.



இலங்கை - மட்டக்களப்பு 


தமிழர் வீரமிக்க பாரம்பரியத்தினை உலகிற்கு பறைசாற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாக்கப்படல் வேண்டும்  எனும் நோக்கோடு இலங்கயின் பல இடங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களுடன் மட்டக்களப்பு இளைஞர்களும் இணைந்துகொண்டனர் !



அமெரிக்கா

தமிழர்களின் பாரம்பரியத்தை அழிய விடக்கூடாது என்பதற்காக கடும் குளிரையும் பொருட்படுத்தாது குடும்பத்தோடு ஆண்களும், பெண்களும், தங்கள் சிறு குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு வீதிக்கு இறங்கியுள்ளதாகவும், தமிழகத்திலுள்ள தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு அமெரிக்காவிலும் ஆதரவு உள்ளது என்பதை காண்பிக்க வந்துள்ளதாகவும் அவர்கள் பெருமிதத்தோடு தெரிவித்தனர்.


ஆவுஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் தமிழ் இளைஞர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இலங்கை

இலங்கை யாழ்பாணத்தில் இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்றும், பீட்டா அமைப்பை முற்றாக தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அலங்கா 'நல்லூர்' ஆடும் வரை ஈழ 'நல்லூர்' அடங்காது என்றும், தமிழனத்தின் தனித்துவத்தை தடுக்காதே என்றும் தலைகுனியும் நிலையில் தமிழன் இல்லை என்றும் இளைஞர்கள் முழக்கமிட்டனர்.