Breaking News

உன்னிச்சை இருநூறுவில் மக்களது நீண்ட கால தேவையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உன்னிச்சை இருநூறுவில் மக்களது நீண்ட கால தேவையாக காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு எட்டியுள்ளது.

உன்னிச்சை இருநூறுவில் பிரதேச மக்கள் மிக நீண்ட காலமாக தூர இடங்களுக்கு சென்று குடி நீரினைப் பெற்று வந்தார்கள்.இது இரவு நேரங்களில் மக்களுக்கு பெரும் அச்சமாக காணப்பட்டது குறிப்பாக முஸ்லிம்களின் நோன்பு கால இரவு நேரங்களில் குடிநீரினைப் பெற்றுக் கொள்வதில் பெரும் சிரமத்தினை எதிர் கொண்டார்கள்.
இந்நிலையில் இத் தேவைப்பாடு தொடர்பில் இருநூறுவில் பிரதேச மக்களினால்  சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட்லெவ்வையினது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் பொதுக் கிணறு ஒன்று நிர்மானிக்கப்பட்டது. 

(ஜம்இய்யதுஷ் ஷபாப்) இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் அனுசரணையில் நிர்மானிக்கப்பட்ட மேற்படி பொதுக்கிணறு மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு கடந்த 14-01-2017 சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது.

இதன் போது குறித்த பொதுக்கிணறு சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வையினால் பொது மக்கள் பாவனைக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உன்னிச்சை இருநூறுவில் முஹைதீன் ஜூம்மா பள்ளிவாயல் தலைவர் எம்.ஸ்.ஆதம் லெவ்வை உட்பட அப் பிரதேச மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த பிதேசத்தில் மூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் முயற்சியின் பயனாக நிர்மானிக்கப்பட்ட இரண்டாவது பொதுக் கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.
(பழுலுல்லாஹ் பர்ஹான்)