Breaking News

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையினை நிவர்த்திக்க இதை படியுங்கள் !

பருவமடைந்த பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி என்பது 28 முதல் 32 நாட்களுக்கு ஒருமுறை ஏற்படும். மாதவிடாய் சீராக இல்லாமல் அதிக நாட்கள் கழித்தோ அல்லது குறைவான நாட்களிலோ அடிக்கடி மாதவிடாய் வந்தால் மருத்துவரை அணுகி, அதனுடைய காரணம் என்பது பற்றி விசாரிப்பது தான் சிறந்தது.

அதுபோன்ற, மாதவிடாய் பிரச்சனைகளுக்கு வீட்டிலிருந்தே  செய்யக்கூடிய சில மருத்துவங்களைப்பற்றி பார்ப்போம்.

ஆலமர வேர்

ஆலமர வேரினை நீரில் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, அதனுடன் பால் கலந்து, தினமும் இரவு தூங்குவதற்கு முன் குடிக்க வேண்டும்.

பட்டை

பட்டையை பொடி செய்து, அதை பாலில் கலந்து குடிக்கலாம் அல்லது பட்டையை பாலில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்தும் குடிக்கலாம். இதனால் மாதவிடாய் பிரச்சனைகள் குணமாகும்.

எள்

எள்ளானது, அதிக கால்சியம் சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே இதை தினமும் தங்களின் உணவில் சேர்த்துக் கொண்டால் ஹார்மோன் சுரப்புகளை சீராக்கி, மாதவிடாய் பிரச்சனை வராமல் தடுக்கிறது.

வெல்லம்

வெல்லம் மற்றும் எள்ளை வறுத்து பொடி செய்து, தினமும் சாப்பிடலாம் அல்லது வெல்லத்தை இனிப்பு வகைகளில் சேர்த்தோ மற்ற உணவுகளில் சேர்த்தோ சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் பிர்ச்சனைக்கு எளிதில் தீர்வு காணலாம்.

எலுமிச்சை

எலுமிச்சையில் விட்டமின் C அதிகம் உள்ளது. எனவே அது ரத்த செல்களை அதிகரிக்க செய்து, இரும்புச் சத்தினை உடலில் உறிஞ்சிக் கொள்வதற்கு உதவி செய்வதால், ரத்தம் விருத்தியாகி, மாதவிடாய் பிரச்சனைகளை தடுத்து சீராக்குகிறது.

பப்பாளி

பப்பாளி தினமும் சாப்பிட்டு வந்தால், அதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் நமது உடம்பின் ஜீரண சக்தியை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் மாதவிடாய் பிரச்சனைகள் வராமல் தடுத்து, அதை சீராக்குகிறது.