Breaking News

உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் 25 வீதம் பெண் பிரதிநிதித்துவத்திகாக ஒன்றினைவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின்  பிரதிநிதித்துவத்தை அதிகரித்து கொள்வதற்கான செயலமர்வு மட்டக்களப்பில்  நடைபெற்றது .   

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்க்கொள்ளும் நோக்காக கொண்டு 25 வீதம் பெண் பிரதிநிதித்துவத்திகாக ஒன்றினைவோம் எனும்  தொனிப்பொருளில் ஒரு நாள் செயலமர்வு  மட்டக்களப்பு கிறிஸ்தவ வாலிப சங்க மண்டபத்தில் (13)திங்கள்கிழமை  நடைபெற்றது .  


மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலாத்துறை ,கிறிஸ்தவ சமய இணைப்புச் செயலாளர் ரஸ் சதீச்காந்த் ஒருங்கமைப்பில் நடைபெற்ற இந்த செயலமர்வில்  அகில இலங்கை சுதந்திர கட்சியின் மகளிர் அணி செயலாளர் திருமதி .சந்திரிகா டி  சொய்சா ,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ் .எம் .சாள்ஸ் ,,மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு பிராந்திய இணைப்பாளர் எ சி எ . அசிஸ் ,, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே , குணநாதன் , பெண்களின் தேவைக்கான பரிந்துரை செய்யும் வலையமைப்பின் இனைப்பாளர் திருமதி ஆர் .ருத்ராதேவி மற்றும் பொது அமைப்புக்களின் பெண்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் .(லியோன்)