இளைஞர் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் அபிவிருத்தி
நடவடிக்கைகள் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு
தெளிவூட்டும் ஊடகவியலாளர் சந்திப்பு மட்டக்களப்பு மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தின் மாவட்ட காரியாலயத்தில் (16) வியாழக்கிழமை நடைபெற்றது.
கொள்கைத்திட்டமிடல் மற்றும் பொருளாதார நடவடிக்கை
அமைச்சின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ்
செயற்படுகின்ற இந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2017 ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது .
செயற்படுகின்ற இந்த தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 2017 ஆண்டுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலே இந்த ஊடக சந்திப்பு நடைபெற்றது .
மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஹாலீத்தின் ஹமீர் தலைமையில்
நடைபெற்ற இந்த ஊடக சந்திப்பில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி ஜே.
கலாராணி, திருமதி நிஷாந்தி அருள்மொழி, மட்டக்களப்பு மாவட்ட நிஸ்கோ கூட்டுறவு வங்கி
முகாமையாளர்
ப.கிருபைராசா, தகவல் மத்திய நிலைய உத்தியோகஸ்தர் ரி.மகேந்திரராஜா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர் (லியோன் )