Breaking News

இன்றைய ராசிபலன்-02.03.17

மேஷம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். அசுவனி நட்சத்திரக்காரர்கள் முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் பரிவாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


மிதுனம்

ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். இனிமையான நாள்.  


கடகம்

சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள். 


சிம்மம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள். 


கன்னி

சந்திராஷ்டமம் தொடங்குவதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.


துலாம்

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 


விருச்சிகம்

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.   


தனுசு

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள். 


மகரம்

புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். எதிர்ப்புகள் அடங்கும். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 


கும்பம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்க வித்திடும் நாள். 


மீனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. முகப்பொலிவுக் கூடும். எதிர்பார்த்த பணம் வரும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.