Breaking News

மருந்து, மாத்திரைகளுக்கு கிண்ணியா வைத்தியசாலையில் மீண்டும் பாரிய தட்டுப்பாடு.

கிண்ணியா வைத்தியசாலையில் சகல மருந்துகளுக்கும், மாத்திரைகளுக்கும் மீண்டும் பாரிய தட்டுப்பாடு நிலவுதாக, இவ் வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள் சீட்டைகள் மூலம் தனியார் மருந்து கடைகளில் பெற்றுக் கொள்ளுமாறு எழுதிக் கொடுக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ் வைத்தியசாலைக்கு கடந்த ஜனவரி மாதம் வரவேண்டிய மருந்து, மாத்திரைகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லையென இவ்வைத்தியசாலையின் மருந்துக்குப் பொறுப்பான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

நேற்று இரத்த அழுத்தம் மற்றும் டைப்பட்டிக் போன்ற நோயாளர்கள் பெருமளவில் வந்திருந்தினர். இவர்களுக்கான மருந்துகள் வழங்கப்படாமல் இத்தகைள சீட்டைகளே வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.