மகனுக்காக முதலில் நாயை வைத்து படமெடுத்தார் இப்போது மகனுக்காக பேயாக நடிக்கிறார்
பேயை டிஸைன் டிஸைனாக காட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். பெண் பேய்கள் போராடித்து ஆண் பேய்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளன. அதேபோல் நிகழ்கால கதைகளிலிருந்து சரித்திர காலத்துக்கு பேய்கள் கூடு மாறுகின்றன. சிபி நடிக்கும் ஜாக்சன் துரை சரித்திரகால பேய்கதையாம். தமிழில் இதுதான் முதல் சரித்திர பேய் என்கிறார் படத்தை இயக்கும் தரணிதரன். இந்தப் படத்தில் சத்யராஜும் இருக்கிறார். முதல்முறையாக இதில் அவர் பேயாக வருகிறார்.
மகனுக்காக நாயை வைத்து படமெடுத்தவர் அடுத்து பேயாக நடிக்கிறார். அடுத்தப் படம் என்னவாக இருக்கும். யோசனையே வரலையே பாஸ்.



