20ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்வேன்
சிறுபான்மை கட்சிகள், சிறு கட்சிகளின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை வர்த்தமானியில் பிரசுரித்தமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்லவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமாறு ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
தங்களுடைய கருத்துகள் தொடர்பில் பரிசீலனைக்கு உட்படுத்தவிட்டால் அரசியல் அமைப்பின் 20ஆவது திருத்தத்தை மூன்றிரலிண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதை தடுக்கக்கூடிய ஆகக்கூடிய நடவடிக்கையை எடுக்கபோவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.



