அறபு மொழி தெரிந்த அனைவராலும் அறபு மொழியை கற்பிக்க முடியாது - இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத் தலைவர் அலியார் றியாதி தெரிவிப்பு
அறபு மொழி தெரிந்த அனைவராலும் கற்பித்தல் நுட்பங்களை அறிந்து கொள்ளாது அந்த மொழியை கற்பிக்க முடியாது என காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அலியார் (றியாதி) தெரிவித்தார்.
ஐந்து நாள் வதிவிடப் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்த அறபுக் கலாசாலைகளில் அறபு மொழியை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு காத்தான்குடி கடற்கரை சதுக்கத்தில் அமைந்துள்ள தாருல் அர்ஹம் மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்
அல் குர்ஆன் அருளப்பட்ட மொழியும் அறபு மொழியாகும்இ சரியான முறையில் அறபு மொழியைப் புரிந்துகொள்ள முடியாததன் காரணமாகவே குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு இஸ்லாத்தின் பெயரால் பிழையான விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.
மௌலவிகள் அல்லாதோருக்கும் அறபு மொழியை கற்பிக்கும் விடயம் சம்பந்தமாக பலரும் தமது ஆர்வத்தினை வெளிப்படுத்தியுள்ளார்கள். அதற்கமைவாக யுசயடிiஉ கழச யடட செயற்றிட்டத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அறபு மொழியைக் கற்பதன் மூலம் குர்ஆனை இலகுவாக விளங்கிக் கொள்வதற்கான சாத்தியம் அதிகரிக்கும்.
இந்த நாட்டில் 250இற்கும் மேற்பட்ட மதரசாக்கள் உண்டு இவற்றில் அறபு மொழியைக் கற்பிக்கும் 1000இற்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பகுதி பகுதியாக வரவழைத்து பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
காத்தான்குடியில் பல மதரசாக்கள் இருந்தபோதிலும் பெரும்பாலான மதரசாக்கள் வதிவிடப் பயிற்சி நெறி தொடர்பில் ஆர்வம் காட்டவில்லை. அறபு மொழி தெரிந்த அனைவராலும் கற்பித்தல் நுட்பங்களை அறிந்து கொள்ளாது அந்த மொழியை கற்பிக்க முடியாது.
பணத்தை செலவு செய்வதற்காக இப் பயிற்சி நெறி ஒழுங்கு செய்யப்படவில்லை. பாடநூல்கள் எவ்வாறு கற்பிக்கப்பட வேண்டும் அறியச் செய்ய வேண்டும் என்பதற்காகவே ஏற்பாடு செய்யப்பட்டது எனவும் அஷ்ஷெய்க் ஏ.பீ.எம். அலியார் (றியாதி) தெரிவித்தார்.
இவ் வதிவிடப் பயிற்சி நெறி றியாத் அல்அறபிய்யா லில்ஜெமீஃ அல்ஹைஆ அல்ஆலமிய்யா லித்தன்மியாஇ கொழும்பு அல்மர்கஸ் அத்தகாபி ஆகியவற்றின் அனுசரணையுடன் காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தினால் நடாத்தப்பட்டது.
இவ் வதிவிடப் பயிற்சி நெறியை பூர்த்தி செய்த அறபுக் கலாசாலைகளில் அறபு மொழியை கற்பிக்கும் 25 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
நமது நிருபர்
நமது நிருபர்



