Breaking News

உலகில் ’ டாப் 100 ‘ பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி

உலகில்  ’ டாப் 100 ‘ பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் தோனி இடம்பெற்றுள்ளார். போர்பஸ் செய்தி இதழ் உலகளவில் உள்ள விளையாட்டு வீரர்களில் பணக்கார வீரர் யார் என்பதை கண்டறிந்து அதன் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நடப்பு ஆண்டிற்கான பட்டியலில் இந்திய கேப்டன் தோனி 186 கோடி ரூபாய்களை சம்பாதித்து 23 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

முதல் இடத்தில் குத்துச்சண்டை வீரரான மேவெதர் இடம்பெற்றுள்ளார். இவர் நடப்பு ஆண்டில் 1800 கோடி ரூபாய்களை சம்பாதித்துள்ளார். 2 ஆம் இடத்திலும் குத்துச்சண்டை வீரர் மேனிபாக்கியோவும், 3 ஆவது இடத்தில் கால்பந்து வீரர் ரொனால்டோவும் இடம்பெற்றுள்ளனர்.