இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்ருவிப்பளர் ரவி சாஸ்திரிக்கு ஊதியமாக 7 கோடி ரூபாய்
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரிக்கு ஆண்டு ஊதியமாக 7 கோடி ரூபாய் வழங்கப்படும் என தகவல் கசிந்துள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் பிளெட்சரின் பதிவு காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, தற்காலிக பயிற்சியாளராக ரவி சாஸ்திரியை பிசிசிஐ நியமித்தது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரவி சாஸ்திரியே இருந்தால் நன்றாக இருக்கும் என கிரிகெட் வாரியத்திடம் கோலி கூறியுள்ளார்.
இந்நிலையில் வங்கதேச தொடர் முடிந்த பின் இந்திய அணியின் பயிற்சியாளராகிறாக ரவி சாஸ்திரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் இவருக்கு ஆண்டு ஊதியமாக 7 கோடி தரப்படுமாம். இதில் தொலைகாட்சி வர்ணனையாளர் பதவிக்கு ரூ.4 கோடியும் மற்றும் அணியின் இயக்குனர் பதவிக்கு ரூ.3 கோடியும் அடங்கும்



