பங்களாதேஷ் வீரர் சபீர் ரஹ்மானுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படலாம்
பங்களாதேஷ் கிரிக்கெட் வீரர் சபீர் ரஹ்மானுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உருவாகியுள்ளன. உள்ளக கிரிக்கெட் போட்டி ஒன்றில் அனுமதியின்றி விளையாடியமைக்காக பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அவரிடம் விளக்கம் கோரியுள்ளது. விதிமுறைகளை மீறியிருக்கின்றார் என உறுதி செய்யப்பட்டால் அவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் வாய்ப்புகள் உள்ளன. இந்த சம்பவம் தொடர்பாக நான் அறிந்துள்ளேன். அவர் உயர் திறமைக்கான நிகழ்ச்சித் திட்டத்திற்குள் உள்ளார். அத்துடன் ஒருநாள் சர்வதேசப்போட்டி வீரர். எனவே அவர் நிச்சயம் அனுமதி பெற்று இருக்க வேண்டும் என பங்களாதேஷ் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தொழிற்பாட்டுக் குழுவின் தலைவர் நைமூர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.



