ஒரே நாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்த புலி டீஸர் !!!
விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு புலி படத்தின் டீஸரை வெளியிட்டனர். சிம்புதேவன் இயக்கியிருக்கும் இந்த சரித்திரப் படத்தில் விஜய் தளபதியாக வருகிறார். அவரது இன்னொரு வேடத்தை ரகசியமாக வைத்துள்ளனர்.
புலி படத்தின் டீஸரில் சரித்திரகால ராணுவ உடையில் வருகிறார் விஜய். பாகுபலியின் சரித்திரகால காட்சிகளை ட்ரெய்லராக பார்த்தவர்களுக்கு புலியின் காட்சிகள் பாய்ச்சல் குறைவாகவே தெரிய வாய்ப்புள்ளது.
இருந்தும், முதல் நாளிலேயே 11 லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் யூடியூபில் புலி டீஸரை பார்த்துள்ளனர். விஜய் மீதும், புலி மீதும் ரசிகர்கள் வைத்திருக்கும் எதிர்பார்ப்பையே இந்த அதிகபடி எண்ணிக்கை காட்டுகிறது.



