முதலையின் மீது பயணம் செய்யும் ரக்கூன்
மத்திய புளோரியாவில் வனப்பகுதியில் ரிச்சார்டு ஜோனஸ் என்பவர், தனது
குடும்பத்தினருடன் நடந்து சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது தண்ணீரில் சென்ற முதலையின் மீது ரக்கூன் சென்றதை பார்த்து அதிர்ச்சியாக பார்த்து உள்ளார். பின்னர் அந்த காட்சியை புகைப்படம் எடுத்து உள்ளார். மிகவும் அரிதான அக்காட்சியை ஜோனஸ் சமூக வலைதளங்களில் பதிவுசெய்து உள்ளார். கடந்த ஞாயிறு அன்று புகைப்படம் எடுக்கப்பட்டதில் இருந்து இதுதொடர்பான செய்திகள் வெளியாகியே வருகிறது. அனைத்து உலக செய்தி இணையதளங்களும் புகைப்படத்தை பாராட்டி செய்தி வெளியிட்டு உள்ளது.
முதலையின் மீது ரக்கூன் பயணம் செய்யும் புகைப்படமானது சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்-களை வாங்கி குவித்து உள்ளது. பார்க்கும் அனைவரும் பகிர்ந்தும் வருகின்றனர். கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்தே புகைப்படமானது சமூக வலைதளங்களில் சுற்றிவருகிறது. இதுதொடர்பாக ரிச்சார்டு அப்பகுதி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், “முதலை ஆற்றில் நீருக்குள் சென்றதும், அதன்மீது தந்திரமாக ரக்கூன் குதித்துவிட்டது. தொடர்ந்து எங்கும் சாயாமல், முதலையின் மீது நின்ற வண்ணம் ஆற்றில் பயணம் செய்தது.” என்று கூறிஉள்ளார்.



