Breaking News

இலங்கை கிரிக்கட் அணி பங்குபற்றும் போட்டிகளை ஒளிபரப்புவதற்கான உரிமை ரூபவாஹினி அலைவரிசைக்கு

நமது நிருபர்

இலங்கை கிரிக்கட் அணி பங்குபற்றும் சர்வதேச கிரிக்கட் போட்டிகளை இலங்கையினுள் நேரடியாக ஒளிபரப்புச் செய்வதற்கான உரிமையினை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வழங்குவதற்கு கிரிக்கட் இடைக்கால சபை தீர்மானித்துள்ளது.

கிரிக்கட் போட்டிகளை நேரடியாக இலங்கையினுள் ஒளிபரப்புச் செய்வதற்கான உத்தியோகபூர்வ உரிமையினை வழங்குவது சம்பந்தமாக இலங்கைக் கிரிக்கட் சபைக்குக் கிடைக்கப்பெற்ற விலைமனு மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஆவணங்களை பரீட்சித்ததன் பின்னர் கடந்த 4ஆந் திகதி மாலை இடம்பெற்ற கிரிக்கட் இடைக்கால சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.  

அதற்கமைவாக இவ் வருடம் (2015) தொடக்கம் எதிர்வரும் 03 ஆண்டு காலத்திற்கு இலங்கை கிரிக்கட் அணி பங்குபற்றும் கிரிக்கட் போட்டிகளை இலங்கையினுள் ஒளிபரப்புச் செய்வதற்கான உத்தியோகபூர்வ உரிமை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு கிடைத்துள்ளது.