அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்வு
அண்மையில் நடைபெற்ற "மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு புதிய பரிமாணத்தை நோக்கி" என்ற தொனிபொருளில் இலங்கையில் மனிதாபிமான சேவை மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அரச சார்பற்ற நிறுவனங்கள் (NGO) மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார் மேலும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீது எதிர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படமாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார். அதற்காக, அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை உடனடியாக செயற்படுத்தும் வகையில் கொள்கை செயல்படுத்தல் அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும் என்றும் அவர் தெருவிந்தார்.



