ஒலியை விட 1.8 மடங்கு அதிவேகமாக சிறிப்பாயும் பயணிகள் விமானம்: அமெரிக்காவில் தயாரிப்பு
ஒலியை விட 1.8 மடங்கு அதிவேகமாக சிறிப்பாயக்கூடிய அதிநவீன சூப்பர்சோனிக் விமானத்தை அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஸ்பைக் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதன் மூலம் நியூ யார்க்கில் இருந்து மூன்றே மணி நேரத்தில் லண்டனை சென்றடைய முடியும்.
பாஸ்டனில் தலைமையிடமாக கொண்டு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிவேக ஜெட் ரக விமானங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம் S-512 சூப்பர்சோனிக் ஜெட்டை அறிமுகம் செய்தது.
அதிகபட்சமாக, மணிக்கு சுமார் 2205 கிலோ மீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் இந்த விமானத்தின் மூலம் நியூ யார்க் நகரில் இருந்து லண்டன் நகருக்கு மூன்றே மணி நேரத்தில் சென்றடையலாம் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த S-512 சூப்பர்சோனிக் ஜெட் தாயரிக்கும் குழுவில் இடம் பெற்றுள்ள அனுதாஸ் மொய்ட்ரா என்ற விமான பொறியியலாளர் கூறியதாவது :
மிகவும் அற்புதமாகவும், இலகுவாகவும் “இந்த விமானமானது நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா வடிவிலான இறக்கைகள் பொறுத்தப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் செயல்பாடு அதிகரிப்பதோடு, குறைந்த எரிபொருளில் விமானம் காற்றின் தடையை குறைத்து சிறிப்பாயும்” என்றார்.
எதிர்கால விமான போக்குவரத்தில் வியப்பை ஏற்படுத்த வரும் இந்த சூப்பர்சோனிக் ஜெட்டில் பயணித்தால் பிரான்ஸ் தலைநகரான பாரிசிலிருந்து 6,917 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள துபாய்க்குமிக குறுகிய நேரத்தில் செல்லலாம். நாள் முழுவதும் அங்கு சுற்றி, ஷாப்பிங் செய்துவிட்டு, ஒரு சினமாவும் பார்த்துவிட்டு அன்றிரவே உணவுக்குள் மீண்டும் பாரிஸ் நகரை வந்தடைந்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
சோதனைக்கட்டமாக தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த விமானம், சந்தைக்கு வரும் போது அதன் விலை 60 முதல் 80 மில்லியன் டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



