வடமேல் மாகாணத்தின் அபிவிருத்திக்காகவே நான் போட்டியிடுகிறேன்
ஹம்பாந்தோட்டையை அபிவிருத்தி செய்தது போலவே வடமேல் (வயம்ப) மாகாணத்தையும் அபிவிருத்திக்கு உட்படுத்தும் நோக்கத்திலேயே தான் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிடுவதாக முன்னாள் ஜனாதிபதியும் பொதுத் தேர்தல் வேட்பாளருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். ராஜபக்ஷ குடும்பத்தை விரட்டியடிப்பதற்காகவே தாங்கள் ஆட்சிக்கு வந்ததாக சிலர் கூறிவருகின்றனர். அரசியலூடாக மக்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் எவ்வளவு செய்தார்கள் என்பது மக்களுக்கே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.



