சீனாவில் 6.3 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம்
சீனாவில் 6.3 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை.
சீனாவின் ஜின்ஷியாங் மாகாணத்தில் குவாகவுண்ட்டி என்ற இடத்திற்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் அதிகமாக நடைபெறும் இங்கு இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார். நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதம் தொடர்பாக உடனடியாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. பெரிய அளவில் எந்தஒரு சேதமும் இருக்காகது என்று சின அதிகாரிகள் நம்பிக்கையில் உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது.
6.3 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து நில அதிர்வுகளும் ஏற்பட்டு உள்ளது. இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. இந்தவாரத்தில் மட்டுமே இது இரண்டாவது நிலநடுக்கம் ஆகும். இவ்வருடத்தில் மட்டும் சுமார் 8 முறை நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நிலநடுக்கம் தொடர்பாக சீன நிலநடுக்க ஆய்வு மைய அதிகாரி பேசுகையில், “நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் ஒருபகுதியில் அதிகமாக குவிந்து இருந்தால், பெரும் அழிவுக்கு வழிவகை செய்யும். ஆனால் இங்கு மிகவும் குறைந்த மக்களே அங்கு உள்ளனர், என்வே மிகவும் மோசமாக சேதம் இருக்க வாய்ப்பு கிடையாது,” என்று கூறிஉள்ளார்.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது அங்கிருந்த கட்டிடங்கள் அனைத்தும் குலுங்கிஉள்ளது. மக்கள் அனைவரும் வீட்டிற்கு வெளியே ஓடிவந்து உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.



