Breaking News

பன்றி இறைச்சியுடன் ஒருவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி மாரவில பகுதிக்கு எடுத்துச்செல்லப்படவிருந்த நூறு கிலோ பன்றி இறைச்சி செவ்வாய்க்கிழமை (07) மாலை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரையும் கைதுசெய்ததாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். குச்சவெளியிலுள்ள மீன்வாடியொன்றில்  மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.