Breaking News

குவைத்தில் பேங்கில் ரூ 25 கோடி போட்டு வைத்திருந்த பிச்சைக்காரர் கைது

வளைகுடா நாடான குவைத்தில் போலீசார் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது பிச்சைக்காரர் ஒருவர் அங்குள்ள மசூதி முன்பு நின்று கொண்டு பிச்சை எடுத்துக் கொண்டிருந் தார்.அங்கு வருவோரிடம் தன்னிடம் பணமோ, வீடோ எதுவும் இல்லை. எனவே பணம் தாருங்கள் என கேட்டு கொண்டிருந்தார்.


வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள குவைத் பக்ரைன் ஓமன், கத்தார் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரசு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் பிச்சை எடுக்க அனுமதி இல்லை. குறிப்பாக புனித மாதமான ரமலானில் அதற்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே, அந்த பிச்சைக் காரரை போலீசார் கைது செய்தனர். அவரை அல் அக்மதி போலீஸ் நிலையத் துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் வங்கியில் 5 லட்சம் குவைத் பணம் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது.

அது இலங்கை பணத்தில் ரூ. 25 கோடி ஆகும். எனவே அவர பொதுமக்களை ஏமாற்றியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.பொதுவாக குவைத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர் கள்தான் பெருமளவில் பிச்சை எடுக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டு உடனே அங்கிருந்து வெளி யேற்றப்படுகின்றனர். கடந்த ஏப்ரலில் அதுபோன்று 22 பிச்சைக்காரர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்களில் பெரும் பாலா னோர் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள்.