துமிந்த சில்வாவுக்கு சந்தர்ப்பம் வழங்கக்கோரி மீண்டும் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வாவுக்கு வேட்புமனுவில் இடம் வழங்குமாறு கோரி அவரது ஆதரவாளர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வேட்பு மனுவில் கைச்சாத்திடும் கொழும்பு மஹாவெலி கேந்திர நிலையத்திற்கு அருகில் ஒன்று கூடினர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து இது சம்பந்தமாக விளக்கமளிப்பதற்கு பிக்குகள் உள்ளிட்ட பெருமளவானோர் வருகை தந்திருந்ததோடு அவர்களால் ஜனாதிபதியை சந்திக்க முடியவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கும் சிலர் வருகை தந்திருந்தனர். மஹாவெலி கேந்திர நிலையத்திலிருந்த குழுவினரை சந்தித்த தினேஷ் குணவர்தன, துமிந்த சில்வாவுக்கு வேட்புமனுவில் இடம் வழங்குவது சம்பந்தமாக இன்று (12) மாலை கூட்டமைப்பின் விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே அங்கு கூடியிருந்த சிலர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நமது நிருபர்



