Breaking News

கட்சி தாவுதல் என்பது பல் பிடுங்குவதைவிட இலகுவான வேலை – ராஜித பற்றி டலஸ் அழகப்பெரும

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கட்சி தாவுதல் என்பது பல் பிடுங்குவதைவிட இலகுவான வேலையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். 

அரசியலுக்கு வந்ததிலிருந்து இன்று வரை அவர் ஒன்பது தடவைகள் கட்சி மாறியுள்ளார் எனவும் லங்கா சம சமாஜக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மஹஜன கட்சி, பகுஜன சுதந்திர முன்னணி போன்ற கட்சிகளில் அங்கம் வகித்த அவர் மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் அதனைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், தற்போது மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் மாறியுள்ளார் என தெரிவித்தார்

சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன ஒரு பல் வைத்தியர் என்பது குறிப்பிடத்தக்கது 
நமது நிருபர்