Breaking News

மட்டக்களப்பு மாநகர சபையில் இன நல்லுறவு இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இன நல்லுறவு இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் (14) மட்டக்களப்பு நகர மண்டபத்தில் மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. 

மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர் நலன்புரிச் சங்க ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக இந்து, கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய சமயத் தலைவர்கள் கலந்து கொண்டனர் 

இந்து சமய உரை மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி சதுர்பூஜானந்தா அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. 

கிறிஸ்தவ சமய உரை மட்டக்களப்பு, தாண்டவன்வெளி பங்குத் தந்தை அலெக்ஸ் ரொபட் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. 

இஸ்லாமிய சமய உரை மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயலின் பேஷ் இமாம் நளீம் பலாஹி அவர்களினால் நிகழ்த்தப்பட்டது. 

நிகழ்விற்கான கிராஅத் மற்றும் மஃரிப் தொழுகைக்கான அதான் ஆகியவை அல்ஹாபிழ் மொஹமட் பைரூஸ் நஹ்ஜியினால் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வர்த்தக சங்கம், முஸ்லிம் வர்த்தகர் நலன்புரிச் சங்கம், வரி இறுப்பாளர்கள் சங்கம், சிவில் சமூக அமைப்பு ஆகியவற்றின் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர்கள், பாடசாலை அதிபர்கள், மட்டக்களப்பு மாநகர சபை உத்தியகத்தர்கள் ஊழியர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.  
நமது நிருபர்