Breaking News

கிளி எப்படி பேசுகிறது என்ற மர்மம் நீங்கியது

கிளி எப்படி பேசுகிறது என்ற மர்மம் நீங்கியது

கிளிகளின் மூளையின் வித்தியாசமான கட்டமைப்பு தான் அவைகளை மனிதன் பேசுவதை உள்வாங்கி அதே போல் பேச வைக்கிறது என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கிளிகளின் பேசும் திறன் :  மற்ற பறவைகளுக்கு இல்லாத விநோதமான தன்மை கிளிகளுக்கு உள்ளது. கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை கூட பிஐயில்லாமல் உச்சரிக்கும். காகம், நைட்டிங்கேல் போன்றவை பாடும் பறவைகளென அழைக்கப்பட்டாலும், இந்த பறவைகளால் வார்த்தைகளை உச்சரிக்க முடியாது. கிளிகளின் பேசும் திறன் பற்றிய ஆய்வு வெற்றி:  அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கிளிகளின் பேசும் திறனை பற்றி ஆய்வு மேற்கொண்டனர். கிளிகள் எவ்வாறு குரலை உள்வாங்கி கொள்கிறது, உள்வாங்கிய குரலையும் வார்த்தைகளையும் எவ்வாறு பின்பற்றி, அதே போன்று ஒலி எழுப்புகிறது என ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் கிளிகளின் மூளை உடற்கூறு பிற பாடும் பறவைகளின் மூளை உடற்கூற்றில் (Structural differences) இருந்து வேறுப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குரல் கற்றல் திறன் :  குரல் கற்றல் திறன் என்பது குரலை உள்வாங்கி கொள்ளும் திறன் ஆகும். கிளியின் மூளையில் உள்ள வரையறுக்கப்பட்ட மையம் (defined centers), கிளிகள் குரல்களை உள்வாங்கி கொள்ளும் செயலில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு அறிக்கை ‘PLOS ONE’ என்னும் ஆய்வு பத்திரிகையில் வெளியானது ஆகும்.