Breaking News

சேருநுவரவில் கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு

சேருநுவர அரிப்பு சந்நியில் இன்று (16) முற்பகல் வேனொன்று வீதியைவிட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓருவர் உயிரிழந்துள்ளதோடு இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலீஸார் தெரிவித்தனர்.

வேனின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வீதியைவிட்டு விலகி அருகிலிருந்த வயலினுள் குடைசாய்ந்திருக்கலாம் என பொலீஸார் சந்தேகிக்கின்றனர். 

காயமடைந்தோர் சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  
நமது நிருபர்