ஆந்திராவில் வில்லனாக களமிறங்கும் அருண் விஜய்
என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடித்த போது கிடைத்த பாராட்டும், வரவேற்பும் அருண் விஜய் ஹீரோவாக நடித்த படங்களுக்குகூட கிடைக்கவில்லை. ஆனாலும், தமிழில் வில்லனாக நடிக்க அருண் விஜய்க்கு விருப்பமில்லை. ஹீரோவாக நடிக்க அழைப்பு வருகையில் எதற்கு வில்லன்?
என்னை அறிந்தால் ஆந்திராவரை அவருக்கு பெயர் வாங்கித் தந்திருக்கிறது. அதில் அருண் விஜய்யின் நடிப்பைப் பார்த்த இயக்குனர் ஸ்ரீனு வைட்லா தனது அடுத்தப் படத்தில் அருண் விஜய்யை வில்லனாக்கியிருக்கிறார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ராம் சரண் தேஜா நாயகனாக நடிக்கிறார். ராகுல் ப்ரீத் சிங் ஹீரோயின். இதற்குமுன் ஆர்யா தெலுங்கில் வில்லன் வேடத்தில் நடித்தார். அதன் பிறகு தமிழில் அவர் நடித்தப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்றன.
அருண் விஜய்யின் அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.



