தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் பிரகடனம் - சுற்றறிக்கை வெளியீடு
தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் பிரகடனம் தொடர்பிலும் அந்த காலப்பகுதியில் பின்பற்றப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பிலும் ஜனாதிபதியின் செயலாளரினால் SP/DP – 01 இலக்கமும் 26.06.2015 திகதியும் இடப்பட்டு தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு நிகழ்ச்சித்திட்டம் - 2015 – தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதம் - மாவட்ட மற்றும் பிரதேச நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்தல் என்ற தலைப்பில் அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் சிங்கள மொழியில் சுற்றறிக்கையொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முழு விபரம் வருமாறுஇ
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் 'போதையிலிருந்து சுதந்திரமடைந்த நாடு' என்ற எண்ணக்கருவிற்கு அமைவாக 2015 ஜூலை மாதம் 09ஆந் திகதி தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 08ஆந் திகதி வரை தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதமாக பிரகடனப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி அலுவலகத்தினால் செயற்படுத்தப்படுவதோடு அதனை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக அரசாங்கத்துறைசார்ந்தோருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென்பதோடு மாவட்ட செயலாளர்கள் / மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களினால் விஷேடமாக நிறைவேற்றப்படவேண்டிய செயற்பாடுகளை கீழே குறிப்பிடுகின்றேன்.
02. ஒவ்வொரு அமைச்சினாலும் அந்தந்த அமைச்சுக்களின் விடயப் பரப்பிற்கு அமைவாக தேசிய மற்றும் பிரதேச மட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தவேண்டுமென்பதோடு மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் பரவலான மக்கள் பங்களிப்புடனும் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாதவாறும் இந்த நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்துகின்ற முழுப் பொறுப்பும் மாவட்ட செயலாளர்கள் / மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அளிக்கப்படுகின்றது. இதற்காக பொலீஸ் திணைக்களத்தினது ஒத்துழைப்பினையும் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும். அதற்கமைவாக தேவையான இணைப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவேண்டுமெனவும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
03. உள்ளூராட்சிமன்றங்கள், பொலீஸ் நிலையங்கள், மாவட்ட வைத்திய அதிகாரி காரியாலயங்கள், பிரதேச வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் இதனோடு தொடர்புபட்ட அரச நிறுவனங்களுக்கிடையே மிகக் கவனமாகவும் இணைப்புடனும் இந்த நிகழ்ச்சித்திட்டம் செயற்படுத்தப்படுமென மிகவும் எதிர்பார்க்கின்றேன். பாடசாலைகள், அறநெறிப் பாடசாலைகள் மற்றும் வைத்தியசாலை வளாகங்களினுள் இடம்பெறும் செயற்பாடுகள் அந்தந்த நிறுவனங்களின் தலைவர்களின் விருப்பத்திற்கு அமைவாக செயற்படுத்தப்படும் என்பதோடு அதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
05. தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதத்தினுள் ஒவ்வொரு மாவட்டத்தினதும் முக்கிய நகரங்களில் நிகழ்ச்சித்திட்டங்கள் செயற்படுத்தப்பட வேண்டுமென்பதோடு உத்தேச தினமொன்று உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் தங்களுக்கு அறியத்தரப்படும் அத்துடன் பிரதேச நிகழ்ச்சித்திட்டங்களை பொருத்தமானதொரு தினத்தில் செயற்படுத்த முடியும். இது சம்பந்தமான மேலதிக தகவல்களும் அறிவுறுத்தல்களும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் தங்களுக்கு அறியத்தரப்படும். அதற்கமைவாக, நாடுமுழுவதிலுமுள்ள பிரதான நகரங்களை மையமாகக் கொண்டு 25 விஷேட செயலமர்வுகளும், பிரதேச நகரங்களை மையமாகக் கொண்டு ஆகக் குறைந்தது 332 செயலமர்வுகளும் ஒழுங்கு செய்யப்படுதல் வேண்டும். அதன் கீழ்
I. மாவட்டத்திள்ள முக்கிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு போதைப் பொருள் தவிர்ப்பு சம்பந்தமாக அறிவூட்டும் செயலமர்வினை நடாத்துதல் மற்றும் நகரினுள் சுவரொட்டி மற்றும் அறிவித்தல் பலகைகளைக் காட்சிப்படுத்தி நடைபவனியொன்றினை ஏற்பாடு செய்தல். இந்த செயற்பாட்டிற்கு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலீஸ்மா அதிபர் தங்களுக்கு உதவுவார்.
II. மாவட்டத்திள்ள அனைத்து பிரதேச செயலகங்களையும் மையமாகக் கொண்டு விஷேட அறிவூட்டும் செயலமர்வுகளை ஒழுங்கு செய்தலும் அறிவுறுத்தல் வழங்குதலும். (பிரதேசத்தின் சமய தலைவர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள், ஏனைய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொலீஸ் உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்களுடனும் மற்றும் பொதுமக்களுடனும் தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்).
III. மாவட்டத்தின் அதிகாரப் பிரதேசத்தினுள் அமைந்துள்ள பாடசாலைகள், கிராம சேவை உத்தியோகத்தர் அலுவலகம், குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் அலுவலகம், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அலுவலகம் உள்ளிட்ட அரசாங்க மற்றும் பகுதி அரசாங்க அலுவலக சுற்றாடலிலும் பொது இடங்களிலும் உரிய முறையில் சுவரொட்டிகளை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
IV. போதைப் பொருள் தவிர்ப்பு சம்பந்தமாக சிறு பிரசுரங்களை பொதுவாக மக்களுக்களிடையேயும் விஷேடமாக அடையாளம் காணப்பட்ட பிரிவினரிடையேயும் வினியோகித்தல்
ஆகியவற்றைச் செயற்படுதுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
06. மேற்படி நிகழ்ச்சித்திட்டங்களின்போது பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் வினியோகிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சுவரொட்டிகள் மற்றும் சிறு பிரசுரங்கள் காலக் கிரமத்தில் தங்களுக்கு அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (அதற்கமைவாக ஜனாதிபதி அலுவலகம் மற்றும் இணைப்பினை இலகுவாகப் பேணுவதற்காக தங்களது மாவட்டத்திற்கென பொருத்தமான உத்தியோகத்தர் ஒருவரை நியமித்து அந்த உத்தியோகத்தரை தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்களை 0112354511 என்ற இலக்கத்திற்கு தொலைநகல் மூலம் அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.)
07. இந்த தேசிய போதைப் பொருள் தவிர்ப்பு மாதத்தின் இறுதியில் மாவட்ட செயலாளர்கள் / மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களினால் நிறைவேற்றப்பட்ட செயற்பாடுகள் மற்றும் அவை நிறைவேற்றப்பட்ட திகதி ஆகியவற்றுடன் செயற்பாட்டு அறிக்கையொன்றினை எனக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு மேலும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இது தொடர்பிலான தங்களது ஒத்துழைப்பை மிகவும் மெச்சுகின்றேன் எனவும் அந்த சுற்றிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
நமது நிருபர்



