ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேட்பு மனுக் கோரி 16,000 வண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியிடம் வேட்பு மனுக் கோரி சுமார் 16,000 வண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். இவ் விண்ணப்பங்களுள் நாட்டு மக்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமளவாள புத்திஜீவிகள், தொழில் வல்லுநர்களினது விண்ணப்பங்களும் உள்ளடங்கி இருந்ததாக அவர் மேலும தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்த வேளையில் வேட்பு மனுவுக்காக ஒருவரையேனும் தேடிக்கொள்ள முடியாத மிக மோசமான நிலையில் கட்சி இருந்ததாகவும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியைச் சுற்றி பாரிய மக்கள் அலையொன்று ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்த கியெல்ல எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பெறப் போகும் வெற்றி இதன் மூலம் தெளிவாவதாகவும் சுட்டிக்காட்டினார். இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ள எவருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினால் வேட்புமனு வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.
நமது நிருபர்



