Breaking News

உலகின் மிகப் பருமனான பொப்பிசைப் பாடகி

ஹங்­கே­ரியைச் சேர்ந்த பாடகி ஒருவர், 170 கிலோ­கிராம் உடல் எடையைக் கொண்­டுள்ளார். உலகின் மிகப் பரு­ம­னான பொப்­பிசை நட்­சத்­திரம் இவர் எனக் கூறப்­ப­டு­கி­றது. ஸ்னோபிளெக் எனும் பெய­ரு­டைய இப்பா­டகி, ஹங்­கே­ரியத் தலை­நகர் புடா­பெஸ்டை சேர்ந்­தவர். 34 வய­தான இவர், 6 அடி உய­ர­மா­னவர். அவரின் உடல் எடை 170 கிலோ­கி­ராம்­க­ளாகும். இப்­ப­ரு­மனான எடை­யுடன் அவர் மேடை­களில் ஆடிப்­பாடு­கிறார். அமெ­ரிக்கப் பாட­கி­க­ளான, பிரிட்னி ஸ்பியர்ஸ், லேடி காகா, கெத்தி பெரி ஆகி­யோரைப் போன்று தானும் உலகப் புகழ்­பெற்ற பொப்­பிசைப் பாட­கி­யா­கு­வ­தற்கு ஆசை கொண்­டுள்­ள­தாக ஸ்னோபிளெக் ஒப்­புக்­கொண்­டுள்ளார். அதற்கு இந்த உடற்­ப­ருமன் தடை­யாக அமையும் என அவர் எண்­ண­வில்லை. மாறாக, இப்­ப­ரு­ம­னான உடல் கார­ண­மாக தான் தனித்துவமாக மிளிர முடியும்.