மறுபிறவியில் நாய்களாக பிறப்பதை தடுக்கவேண்டும்!!!
நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்தவர்கள் மறுபிறவியில் நாய்களாகவோ, காகங்களாகவே பிறப்பர் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலுச்சேர்த்துள்ளார். கண்டியில் நேற்று இடம்பெற்ற நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கூறியதைப் போன்று நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினரை மீண்டும் ஆட்சிக்காக தெரிவுசெய்தால் மீண்டும் சொத்துக்களை கொள்ளையடிப்பார்கள் என்றார். இதன் காரணமாக அவர்கள் மறுபிறவியில் நாய்களாகவோ காகங்களாகவோ பிறப்பர். எனவே அவர்கள் அவ்வாறு பிறக்காது நல்ல பிறவிகளை எடுக்க வேண்டுமாயின் ஆகஸ்ட் 17ம் திகதி தேர்தலில் அவர்களை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று ரணில் கேட்டுக்கொண்டார்.


