பிரசன்னவுக்கும் வேட்பு மனு வழங்கப்பட்டது! 13ம் திகதியே உண்மை தெரியும்!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிட மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி நேற்று மாலை நடத்திய செய்தியாளர் சந்தி;ப்பின்போது இந்த அறிவிப்பு வெளியானது. பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலேயே இந்த இறுதிமுடிவு எடுக்கப்பட்டது என்று பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்தநிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு ஆகஸ்ட் 17ம் திகதி தேர்தலில் 7.1 மில்லியன் வாக்குகளை பெற்று வெற்றிப்பெறும் என்று அவர் குறிப்பிட்டார். இதேவேளை 13ம் திகதியன்று வேட்புமனு தாக்கலின் இறுதிநாள் என்ற அடிப்படையில் இன்று யாருக்கு வேட்புமனு வழங்கப்பட்டுள்ளது. யாருக்கு வழங்கப்படவில்லை என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று விமல் வீரவன்ச இதன்போது தெரிவித்தார்.



