போதைபொருள் தொடர்பான சுற்றி வளைப்புக்களில் ஒரு வாரத்தில் 5000 பேர் கைது
சர்வதேச போதைபொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கடந்த 22ஆந் திகதி தொடக்கம் 29ஆந் திகதி வரை நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட போதைபொருள் தொடர்பான சுற்றி வளைப்புக்களில் 5390 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்
ஹெரோயின் 293 கிராம், கஞ்ஜா 98 கிலோகிராம், சட்ட விரோத மதுபானம் 341,000 லீட்டர் மற்றும் கோடா 8,685,000 லீட்டரும் சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டதாகவும் பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நமது நிருபர்



